ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் - காவல்துறை 

0 1802

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து ஏதேனும் விவரங்கள் தெரிந்தவர்கள், 90806 16241 மற்றும் 94981 20467 ஆகிய எண்களில் அழைத்துத் தெரிவிக்கலாம் என்றும் அதற்கு தக்க சன்மானம் வழங்குவதோடு, தகவல் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments